» சினிமா » செய்திகள்

பொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெள்ளி 15, மே 2020 12:03:44 PM (IST)ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் உட்பட இந்திய திரையுலகில் முக்கியமான 7 படங்களின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது அமேசான் நிறுவனம்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் பணிகளும் நடைபெறவில்லை. மேலும் இந்தியா முழுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எந்தவொரு திரைப்படமும் வெளியாகவில்லை. கோடை விடுமுறை வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் யாவுமே வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது அமேசான் நிறுவனம்.

டிஜிட்டலில் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்பதால், அதற்கான விலையைக் கேட்டனர் தயாரிப்பாளர்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தையில், திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத காரணத்தால் பல தயாரிப்பாளர்கள் நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்கு தயாரானார்கள். திரையரங்கு உரிமையாளர்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பல படங்களைக் கைப்பற்றியது அமேசான் நிறுவனம். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அமேசான் நிறுவனம் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது. இன்று (மே 15) காலை தாங்கள் கைப்பற்றிய படங்களையும், எப்போது அவை வெளியிடப்படும் என்ற தகவலையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி

பொன்மகள் வந்தாள் (தமிழ்) - மே 29

குலாபோ சிதாபோ (இந்தி) - ஜூன் 12

பெண்குயின் (தமிழ்) - ஜூன் 19

லா (Law) (கன்னடம்) - ஜூன் 26

ப்ரெஞ்ச் பிரியாணி (கன்னடம்) - ஜூலை 24

சகுந்தலா தேவி (இந்தி) - இன்னும் முடிவாகவில்லை

சுஃபியும் சுஜாதாவும் (Sufiyum Sujatayum) (மலையாளம்) - இன்னும் முடிவாகவில்லை


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory