» சினிமா » செய்திகள்

காவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள்: சூரி புகழாரம்

புதன் 13, மே 2020 11:18:12 AM (IST)காவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள் என நடிகர் சூரி புகழாரம் சூட்டியுள்ளார். 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து தொழில்துறையினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு சில தொழில்துறையினர் இயங்க பொது முடக்கத்தை தளர்த்தி வருகிறது

இந்நிலையில், நடிகர் சூரி, கரோனா பரவுகின்ற சூழலில் அய்யனார் போன்று காவல் துறையினர் தான் நிஜ ஹீரோக்கள் என தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையத்தில் காவலர்களைச் சந்தித்த நடிகர் சூரி காவலர்களுக்கு நன்றி தெரிவித்தார். அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் சில நாட்களுக்கு பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory