» சினிமா » செய்திகள்

வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி ரூ.50 லட்சம் நிதியுதவி

செவ்வாய் 24, மார்ச் 2020 4:53:31 PM (IST)

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. முன்னதாகவே, கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து, சினிமா தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். முன்னதாக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளம் (பெப்சி) தலைவர் ஆர்.கே. செல்வமணி, சினிமாத் தொழிலாளர்களுக்கு நடிகர்கள் முன்வந்து உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored Ads


CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory