» சினிமா » செய்திகள்

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:17:09 PM (IST)

அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதி பகவன்’ ஆகிய படங்களை இயக்கிய அமீர், ‘யோகி’, ‘யுத்தம் செய்’, ‘நினைத்தது யாரோ’ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடிக்கவும் செய்தார். பாலா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். சூர்யா - த்ரிஷா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

2002-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியால், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது. மேலும், தெலுங்கில் ரீமேக்கும் செய்யப்பட்டது. இந்நிலையில், அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வி.இஸட்.துரை இந்தப் படத்தை இயக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதும் இந்தப் படத்தை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory