» சினிமா » செய்திகள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை காட்சிகள் இல்லை : நடிகர் விவேக் வருத்தம் !

வெள்ளி 29, நவம்பர் 2019 5:30:15 PM (IST)

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அனைவராலும் அன்புடன்  அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவரது சமூக அக்கறை கொண்ட பல அழுத்தமான நகைச்சுவைக் காட்சிகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் தற்போதைய சினிமாவில் வரும் காட்சிகள் குறித்து விவேக் கருத்து கூறியுள்ளார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் விவேக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தற்போது வரும் சினிமாப் படங்களில் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், நகைச்சுவைக்கு போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பழைய படங்களில் நகைச்சுவை உள்ளது போன்று இனிவரும் படங்களில் நகைச்சுவை வைக்க வேண்டும்; மேலும் நகைச்சுவை பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.இப்போதைய நகைச்சுவைக் காட்சிகள் வெறுமை இருப்பதாகவும் கூறினார்.


மக்கள் கருத்து

ஆசீர். விNov 30, 2019 - 11:25:58 AM | Posted IP 173.2*****

உங்கள் மாதிரி ஆளுங்க மொக்கை காமெடி பண்ணுனா இப்படித்தான் இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory