» சினிமா » செய்திகள்

ராகவா லாரன்ஸ் பெயரில் பணமோசடி செய்யும் கும்பல்!

வியாழன் 28, நவம்பர் 2019 3:58:04 PM (IST)

பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி அதன் மூலம் ஒரு கும்பல் பணமோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

பிரபல நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் தமிழ் தெலுங்கு படங்களில் நடிப்பதோடு பொது சேவைகளும் செய்து வருகிறார். ஆதரவற்றக் குழந்தைகளுக்கான இல்லம், ஊனமுற்றோருக்கான கல்விச் சேவைகள் மற்றும் முதியோர் இல்லம் போன்றவற்றை அவரது அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவரது பெயரில் போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வீடு கட்டித் தருவதாக சொல்லி மக்களிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் சிலர் அவர் போலவே மிமிக்ரி செய்தும் பணமோசடி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மையத்தின் பொதுச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் கொடுத்துள்ள புகாரில் இந்த செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory