» சினிமா » செய்திகள்

யோகி பாபுவுடன் திருமணமா? நடிகை விளக்கம்

செவ்வாய் 26, நவம்பர் 2019 12:30:36 PM (IST)

யோகிபாபுவுடன் திருமணம் நடந்துவிட்டதாக வைரலாகி வரும் வதந்தி மனைவி நான் தான் என நடிகை சபீதாராய் தெரிவித்துள்ளார்.

யோகிபாபுவுக்கும் ஒரு நடிகைக்கும் திருமணம் ஆகிவிட்டதாக ஒரு புகைப்படம் வைரலாகிய நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை சபிதாராய் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது விளக்கத்தை அளித்துள்ளார் கடந்த 2017ஆம் ஆண்டு யோகிபாபுவுடன் கன்னிராசி என்ற படத்தில் நடித்தேன். அப்போது அவருடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருமண புகைப்படமாக லீக் ஆகியுள்ளது. 

இதை பார்த்து அழுவதா? சிரிப்பதா? கோபப்படுவதா? என்றே எனக்கு தெரியவில்லை; செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம், ஆனால் ஒரு வதந்திக்கு இவ்வளவு முக்கியத்துவமா கொடுப்பது? யோகிபாபு என்னுடைய நண்பர், சக நடிகர். அதை தாண்டி அவருக்கும் எனக்கும் எதுவும் இல்லை. எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணம் நடந்ததாக கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. தயவுசெய்து யாரும் இதனை நம்ப வேண்டாம் என நடிகை சபீதா ராய் விளக்கம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory