» சினிமா » செய்திகள்

இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்தல்; தமிழில் பேசட்டுமா? டாப்ஸி அதிரடி

திங்கள் 25, நவம்பர் 2019 8:21:17 AM (IST)

இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்திய நபரிடம் தமிழில் பேசட்டுமா என கேட்டு அதிர வைத்தார் டாப்ஸி. 

சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற டாப்ஸி, தனது சினிமா வாழ்க்கையை பற்றி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் தனது நடிப்பு அனுபவங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அப்போது டாப்ஸி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து நின்று, ‘டாப்ஸி இந்தியில் பேச வேண்டும்’ என்றார். இதைக் கேட்ட டாப்ஸி, ‘இங்கு இருக்கும் அனைவருக்கும் இந்தி தெரியுமா?’ என கேட்டார். பெரும்பாலானோர் இல்லை என்றார்கள்.

அப்போது அந்த நபர், ‘நீங்கள் இந்தி நடிகை. அதனால் இந்தியில்தான் பேச வேண்டும்’ என்றார். உடனே கோபம் அடைந்த டாப்ஸி, ‘நான் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளேன். தமிழில் பேசட்டுமா?’ என கேட்க, அந்த நபர் வாயடைத்து போனார். நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து டாப்ஸி ஆங்கிலத்தில் தனது பேச்சை தொடர்ந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory