» சினிமா » செய்திகள்

மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி!

புதன் 6, நவம்பர் 2019 4:21:30 PM (IST)

பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். 

சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சிம்புவால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வல்லவன் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனாலும் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாமாகவே அவரைத் தேடிச் சென்று பின்னர் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வராமல் இழுத்தடித்து வந்தார். இடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவந்தார்.

ஆனாலும்  குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் இந்த படம் டிராப் என கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோலிவுட்டில் பேசப்பட்டது. பேசப்பட்டது போலவே மாநாடு படத்தில் சிம்புவுக்குப் பதில் வேறு நடிகர் நடிப்பார் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதன் பின் சிம்புவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து விரிவாக நேர்காணல்களில் குறிப்பிட்டார். இதனால் சிம்புவின் இமேஜ் டேமேஜ் ஆனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்புவின் தாயார் அவர் மாநாடு படத்தில் நடிப்பார் என அறிவித்தார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட்டார் சிம்பு என தகவல்கள் பரவின. இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesThoothukudi Business Directory