» சினிமா » செய்திகள்

மம்முட்டி-ராஜ்கிரண் கூட்டணியில் குபேரன்: தமிழ்- மலையாளத்தில் தயாராகிறது

வெள்ளி 1, நவம்பர் 2019 4:58:36 PM (IST)தமிழ்- மலையாளத்தில் மம்முட்டியும், ராஜ்கிரணும் முதல் முறையாக குபேரன் என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். 

மம்முட்டியும், ராஜ்கிரணும் முதல் முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். `குபேரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை அஜய் வாசுதேவ் டைரக்டு செய்துள்ளார். ஜோபி ஜார்ஜ் தயாரித்து வருகிறார். தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி களிலும் படம் தயாராகிறது. குபேரன் படத்தின் முழு படப்பிடிப்பும் கேரளா மற்றும் கோவையில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. 

இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மாசிலே, அரண் மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இதில், மீனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவர் ராஜ்கிரண் ஜோடியாக வருகிறார். இருவரும் ஏற்கனவே என் ராசாவின் மனசிலே படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். 28 வருடங்களுக்குப்பின், இருவரும் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். படத்தில் மம்முட்டிக்கு ஜோடி இல்லை. படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory