» சினிமா » செய்திகள்

அனுஷ்காவுடன் காதலா? நடிகர் பிரபாஸ் விளக்கம்

புதன் 30, அக்டோபர் 2019 11:15:44 AM (IST)தானும் பிரபல நடிகை அனுஷ்காவும்  காதலிப்பதாக வெளியாகும் தகவல் குறித்து நடிகர் பிரபாசும் வருத்தம் தெரிவித்துள்ளார். 

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர். அவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் அனுஷ்காவை காதலிப்பதாக பரவும் தகவலுக்கு பதில் அளித்து பிரபாஸ் அளித்த பேட்டி வருமாறு:– அனுஷ்காவும், நானும் சில படங்களில் சேர்ந்து நடித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது. 

11 வருடங்களாக இந்த நட்பு நீடிக்கிறது. மற்றவர்கள் நினைப்பதுபோல் இது காதல் இல்லை. எங்களுக்குள் காதல் இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் ஆவதுவரை இந்த வதந்திகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அனுஷ்காவை பொறுத்தவரை அழகானவர். பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். எங்கள் இருவரையும் சினிமாவில் ஒரு ஜோடியாகவே பார்த்தனர். எங்களுக்குள் காதல் என்றும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றும் பரவும் வதந்திகளை எப்படி நிறுத்தவது என்று தெரியவில்லை. நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். அதன்பிற்கு இந்த வதந்தி நின்றுவிடும்.இவ்வாறு பிரபாஸ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory