» சினிமா » செய்திகள்

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் டிரைலர் அக்.12-ல் ரிலீஸ்

செவ்வாய் 8, அக்டோபர் 2019 4:10:32 PM (IST)

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் டிரைலர் அக்.12ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இதில் மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 

இப்படத்தில் ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், பிகில் படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் டிரைலர் அப்டேட் குறித்த தகவலையே இன்று வெளியிட்டனர். பிகில் திரைப்படத்தின் டிரைலர் வரும் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, இதைக் கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பிகில் டிரைலர் ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory