» சினிமா » செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு

செவ்வாய் 8, அக்டோபர் 2019 3:59:37 PM (IST)தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். 

கோலிவுட்டில் புரடொக்‌ஷன் மானேஜராக பல திரைப்படங்களில் பணிபுரிந்தவர் சிறு சிறு வேடங்களில் சில படங்களில் நடித்தார். தவசி, நான் கடவுள், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  திருவண்ணாமலையை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவர். தவசி படத்தில் வடிவேலுவுடன் இவர் தோன்றும் அட்ரெஸ் காமெடியை ரசிகர்கள் யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

குமுளியில் ஒரு படப்பிடிப்பின் போது 4.30 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் இழந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்குத் திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory