» சினிமா » செய்திகள்

பிகில் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சை பேச்சு : நடிகர் விவேக் விளக்கம்

புதன் 25, செப்டம்பர் 2019 11:20:01 AM (IST)

பிகில் இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சு சர்ச்சையாகி இருப்பதைத் தொடர்ந்து, விவேக் தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடித்துள்ளார் விவேக். இசை வெளியீட்டு விழாவில் விவேக் கலந்துகொண்டு பேசும் போது, "சிவாஜி நடிப்பில் இரும்புத்திரை என்ற படம் வெளியானது. அதில் ஒரு பாடல் நெஞ்சில் குடியிருக்கும் என்று ஆரம்பிக்கும். ஆனால் அந்தக் காலத்தில் இப்பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த வசனம் தற்போது நடிகர் விஜய்யால் பிரபலமாகியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

இதற்கு சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற கிண்டல்களை நிறுத்தாவிட்டால் ரசிகர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று சிவாஜி சமூகநலப் பேரவை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தன் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, விவேக் தனது ட்விட்டர் பதிவில் "1960-ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி "நெஞ்சில் குடியிருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதைச் சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க" என்று விளக்கம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory