» சினிமா » செய்திகள்

விஜய் பட விழாவிற்கு அனுமதி ஏன்? கல்லூரி நிர்வாகதிற்கு தமிழக அரசு கேள்வி

செவ்வாய் 24, செப்டம்பர் 2019 12:38:53 PM (IST)

பிகில் பட விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது? என கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 19 ஆம் தேதி பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்காததே சுபஸ்ரீ மரணம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்று பேசியிருந்தார். விஜயின் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் கடுமையான எதிர்கருத்துக்களை  வெளியிட்டனர். 

இந்த நிலையில், பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு  அனுமதி கொடுத்தது ஏன் என தனியார் கல்லூரியிடம் உயர்கல்வித்துறை  விளக்கம் கேட்டுள்ளது. எந்த அடிப்படையில் அனுமதி தரப்பட்டது என கல்லூரியிடம் தமிழக உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஆசீர். விSep 25, 2019 - 12:09:15 PM | Posted IP 108.1*****

இந்த கல்லூரியில் பேட்ட படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்ற போது என்ன நடைமுறையோ அதே நடைமுறை தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory