» சினிமா » செய்திகள்

சீனாவில் தோல்வியடைந்த ரஜினியின் 2.0 படம்!

சனி 14, செப்டம்பர் 2019 3:28:17 PM (IST)

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில்  உருவான  2.0 படம் சீனாவில் வெளியாகி தோல்வியைத் தழுவியுள்ளது. 

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவானது. இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. 

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியானது. ஹிந்திப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு இருப்பது போல 2.0 படமும் அங்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் வாரத்தில் ரூ. 22 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளது 2.0 படம். இதேபோல கடந்த வருடம் மே மாதம், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி 2 படம் சீனாவில் வெளியாகி, ரூ. 52 கோடி மட்டுமே வசூலித்தது. ஹிந்திப் படங்களுக்கு நிகராக சீனாவில் தென்னிந்தியப் படங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 

சீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. பிகே, டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், ஹிந்தி மீடியம், பஜ்ரங்கி பைஜான், ஹிச்கி, அந்தாதுன், மாம் ஆகிய படங்கள் சீனாவில் வெளியாகி நல்ல வசூலை அடைந்துள்ளன. கடந்த மே மாதம், மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் வெளியாகி, ரூ. 100 கோடி வசூலித்த 8-வது இந்தியப் படம் என்கிற பெருமையை அடைந்தது. இதனால் அதே வரவேற்பை 2.0 படமும் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளது.


மக்கள் கருத்து

இவன்Sep 21, 2019 - 07:24:28 PM | Posted IP 162.1*****

சினிமா எல்லாம் ஒண்ணுமில்லாததது , நம் நாட்டில் கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம் முட்டாள் மக்கள் ..

ராமநாதபூபதிSep 16, 2019 - 11:47:36 AM | Posted IP 108.1*****

தமிழ்ல மட்டும் அப்படியே பொளந்து கிட்டு ஓடிச்சாக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory