» சினிமா » செய்திகள்

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி: தனுஷுடன் மோத முடிவு!!

வியாழன் 12, செப்டம்பர் 2019 5:38:06 PM (IST)



தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன், அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதே நாளில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் வெளியாகவிருக்கிறது. 

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . அதனை தொடர்ந்து படத்தில் கமலா என்ற பாடலும் வெளியானது. இந்த படத்தில் பிரான்சிஸ் எழுதிய " சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் " என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். 

தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன், அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தீபாவளி அன்று விஜய், கார்த்தி ஆகியோரின் படம் வெளியாவதாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுவதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் வெளியாகவிருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பிலிருக்கும் சங்கத் தமிழன் படமும் அசுரன் படமும் ஒரே நாளில் வெளியாகவிருக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory