» சினிமா » செய்திகள்

புற்றுநோய் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் நடிகர் ரிஷி கபூர்

புதன் 11, செப்டம்பர் 2019 5:49:27 PM (IST)பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, நேற்று மும்பைக்கு திரும்பினார்.

1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்படுகிறார். தற்போது 67 வயதாகும் ரிஷி கபூருக்கு கடந்த ஆண்டு இறுதியில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 

இந்நிலையில், சிகிச்சையை முடித்துக் கொண்டு, அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், 11 மாதங்கள் 11 நாள்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர்கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகனாவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory