» சினிமா » செய்திகள்

திருமணம் நான் எடுத்த தவறான முடிவு : ரேவதி பேட்டி

திங்கள் 9, செப்டம்பர் 2019 5:18:46 PM (IST)

"என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது திருமணம்" என்று நடிகை ரேவதி கூறியிருக்கிறார்.

மண்வாசனை படம் மூலம் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி தொடர்ந்து நடித்து வருகிறார். தனது திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னை பற்றி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், மண்வாசனை படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, நான் நடிகையா?ன்னு மிரண்டுபோய் அதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார். 

எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாதுன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்புன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்... என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம். இவ்வாறு ரேவதி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory