» சினிமா » செய்திகள்

சிம்புவுக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

வெள்ளி 6, செப்டம்பர் 2019 5:36:15 PM (IST)

நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு படம் திடீரென கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனையடுத்து, மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை தானே 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது மட்டுமல்லாமல், ஞானவேல்ராஜா தயாரிக்கும் `மப்டி ரீமேக்கின் படப்பிடிப்பில் இருந்து இடையிலேயே வந்ததாகவும் ஒரு புகார் இருந்தது. 

இது குறித்து சமரசம் பேச அழைத்தபோது சிம்புவின் நண்பர்களோ, உறவினர்களோ சரியான பதிலளிக்காததால் கடுப்பின் உச்சத்துக்குச் சென்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இதையடுத்து தயாரிப்பாளர்களான சுரேஷ் காமாட்சி, மைக்கேல் ராயப்பன், ஞானவேல் ராஜா மற்றும் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதன் ஆகியோர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர்.இந்நிலையில் சிம்பு, தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவர் நாடு திரும்பியதும் அவர் தரப்பு விளக்கம் கேட்கப்படும் என்றும், உரிய நஷ்ட ஈடு தராவிட்டால், அவரது படங்களுக்கு திரைத்துறை சங்கங்கள் ஒத்துழைக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory