» சினிமா » செய்திகள்

முதன்முறையாக 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம்

சனி 31, ஆகஸ்ட் 2019 11:25:21 AM (IST)

சந்தானம் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.

காமெடியிலிருந்து கதாநாயகனாக மாறி தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சந்தானம் தனக்கான ரசிகர்களை தக்கவைத்துள்ளார். தன்னுடைய பாணியை பெரியளவில் மாற்றிக் கொள்ளாமல் அவர் பயணிப்பது குறைந்தபட்ச வெற்றியை பெற்றுத் தந்து விடுகிறது. இந்நிலையில் தற்போது அவர் முதன்முறையாக சயின்ஸ் பிக்சன் படம் ஒன்றில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.

படம் குறித்து பேசியுள்ள கார்த்திக் யோகி, "நான் இந்த திரைக்கதையை எழுதும்போதே கதாநாயகன் காமெடி, ரொமான்ஸ், அப்பாவித்தனம் ஆகியவற்றை வெளிப்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இது சந்தானத்திற்கு பொருத்தமாக இருக்கும் என அவரை அணுகினேன். முதலில் திரைக்கதையின் ஒன்லைன்களை கூறச் சொன்னார். நான் கூறியதும் அவருக்கு பிடித்துப்போக உடனே நடிக்கச் சம்மதித்தார். சயின்ஸ் பிக்சன் பாணியில் நல்ல பொழுதுபோக்குபடமாக அமையும்” என்று கூறினார்.

மாநகரம் படத்திற்கு வசனம் எழுதியுள்ள கார்த்திக் பலூன், சவாரி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். இந்தப் படத்தில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என மூன்று முக்கிய பாத்திரங்களும் சந்தானம் ஏற்றுள்ளார். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory