» சினிமா » செய்திகள்

கவுண்டமணி குறித்த காட்சியை நீக்க வேண்டும்: சிக்ஸர் படத் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2019 4:09:42 PM (IST)தனது நற்பெயருக்குக் கெடுதல் விளைவிக்கும் காட்சியை நீக்கவேண்டும் என சிக்ஸர் படத் தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதாரவி நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிக்ஸர். தயாரிப்பு - தினேஷ் கண்ணன், ஸ்ரீதர். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படத்தையும் சின்னத்தம்பி பட வசனங்களையும் சிக்ஸர் படத்தில் தவறான முறையில் அவதூறாகப் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றம் சுமத்தியுள்ளார். 

சிக்ஸர் படத்தின் விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டுள்ள ஸ்னீக் பீக் விடியோவில் கவுண்டமணி குறிப்பிடும் காட்சி அமைந்துள்ளது. கவுண்டமணியின் நற்பெயருக்குக் கெடுதல் விளைவிக்கும் காட்சியை நீக்கவேண்டும். மேலும், அவருடைய புகைப்படத்தையும் வசனத்தையும் தவறாகப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படிப் படத்தின் காட்சியை நீக்காமல் மன்னிப்பும் கேட்காமல் இருந்தால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி சார்பாக வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory