» சினிமா » செய்திகள்

அடுத்த சூப்பர் ஸ்டாராக உலகமே உன்னைக் கொண்டாடும்: விஜய்க்கு தாய் ஷோபா வாழ்த்து!!

புதன் 28, ஆகஸ்ட் 2019 5:12:53 PM (IST)

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது என விஜய்க்கு அவருடைய தாய் ஷோபா சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். 

இந்தக் கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. விஜய்க்கு அவருடைய தாய் ஷோபா எழுதியுள்ள வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது: நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக்குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்தக் காகிதத்தில் வடிப்பது?அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இள வயதில் கூட நீ அமைதியின் அவதாரமாக இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிக்கையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்?

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில் என்று எழுதியுள்ளார். 


மக்கள் கருத்து

ராஜ் எSep 6, 2019 - 03:59:05 PM | Posted IP 173.2*****

கண்டிப்பா, சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டும் தான்

மெய்யன்Aug 28, 2019 - 09:52:46 PM | Posted IP 162.1*****

அடுத்த புரட்சி தலைவர் நடிகர் திலகம் உலக நாயகன் லாம் வேண்டாம். ஒன்லி சூப்பர் ஸ்டார் பட்டம் தன வேணும் என்ன. அந்த பட்டம் 44 வருஷமா ஒருத்தரோட கடின உழைப்பு திறமை ல அவருடைய பேராகவே மாறிட்டு. எப்பவும் தனக்குனு ஒரு பேர் வாங்கனுன்னு நெனெக்கிறவன் தான் வாழ்க்கைல ஜெயிப்பான் நிலைப்பான். தளபதி படத்துல இருந்து சுட்ட இளைய தளபதி பட்டமே விஜய் ன் அடையாளம். என்றும் சூப்பர் ஸ்டார் ந ரஜினி nu மட்டும் தான் இந்த உலகம் சொல்லும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory