» சினிமா » செய்திகள்

66-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு ஏமாற்றம்!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2019 5:09:25 PM (IST)



66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழுக்கு ஒரே ஒரு (பிராந்திய) விருது மட்டுமே கிடைத்துள்ளது. 

66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை அறிவித்தார் நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல். 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றுள்ளது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது.

முழு விருதுப் பட்டியல்:

சிறந்த படம் - எல்லாரு (குஜராதி)

சிறந்த இயக்குநர் - ஆதித்யா தர் (உரி)

சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி)

சிறந்த நடிகர் - ஆயுஷ்மா குரானா (அந்தாதுன்), விக்கி கெளசல் (உரி)

சிறந்த அறிமுக இயக்குநர் - சுதாகர் ரெட்டி (நாள்)

நர்கீஸ் தத் விருது - ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)

சிறந்த பொழுதுபோக்குப் படம் - பதாய் ஹோ

சமூக நலனுக்கான சிறந்த படம் - பேட்மேன் (ஹிந்தி)

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் - பானி (மராத்தி)

சிறந்த துணை நடிகர் - ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்)

சிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாய் ஹோ)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - பிவி ரோஹித், சஹிப் சிங், தல்ஹா அர்ஷத் ரேஷி, ஸ்ரீனிவாஸ் போக்லே

சிறந்த பாடகர் - அர்ஜித் சிங் (பத்மாவத்)

சிறந்த பாடகி - பிந்து மாலினி (நதிசரமி)

சிறந்த வசனம் - தரிக் (வங்காளம்)

சிறந்த திரைக்கதை (தழுவல்) - அந்தாதுன்

சிறந்த அசல் திரைக்கதை - சி லா சோ

சிறந்த சவுண்ட் என்ஜினியர் - உரி

சிறந்த படத்தொகுப்பு - நதிசரமி (கன்னடம்)

சிறந்த கலை இயக்கம் - கம்மர சம்பவம் (மலையாளம்)

சிறந்த ஒப்பனை - மகாநடி (தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)

சிறந்த பாடல் - நதிசரமி (கன்னடம்)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)

சிறந்த நடனம் - க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி பாடம் - கூமார்)

சிறந்த தமிழ்ப்படம் - பாரம்

சிறந்த தெலுங்குப் படம் - மகாநடி

சிறந்த ஹிந்திப் படம் - அந்தாதுன்

திரையுலகுக்கு ஏற்ற மாநிலம்  -  உத்தராகண்ட்

சிறப்பு விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், சந்திரசூர் ராய், ஜோஜோ ஜார்ஜ், சாவித்ரி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory