» சினிமா » செய்திகள்

ஜெயலலிதா பயோஃபிக் தாமதம் ஏன்?- நித்யாமேனன் விளக்கம்

திங்கள் 5, ஆகஸ்ட் 2019 11:50:39 AM (IST)மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்படும் ’தி அயர்ன் லேடி’ படம் தாமதமாவது குறித்து நித்யாமேனன் விளக்கம் அளித்துள்ளார்.

நித்யாமேனனை கதாநாயகியாக கொண்டு தி அயர்ன் லேடி என்ற பெயரில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இயக்குநர் பிரியதர்ஷினி இப்படத்தை இயக்க உள்ளார். அதே சமயம், கங்கனா ரணாவத் நடிப்பில் தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜய்யும் பட வேலைகளை தொடங்கி உள்ளார். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிசாக இயக்கி வருகிறார். அக்டோபர் மாதம், தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அப்படத்திற்காக, தமிழ் மொழி உச்சரிப்பு, பரத நாட்டியம் கற்பது போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கங்கனா. 

இந்நிலையில், நித்யா மேனன் மலையாளத்தில் தான் நடித்துள்ள கொளம்பி படத்திற்காக நிருபர்களை சந்தித்துள்ளார். அப்போது தி அயர்ன் லேடி படம் பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த நித்யா மேனன், "தி அயர்ன் லேடி படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறைய முன் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும். இயக்குநர் பிரியதர்ஷினி இந்த படத்தை சென்சேஷனான விஷயமாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு படம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் இப்படத்திற்கு நியாயம் செய்ய விரும்புகிறோம். எனவே, உடனடியாக படத்தைத் தொடங்கி எந்தத் சமரசத்திற்கும் உட்பட விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம்” எனக் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory