» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் சரவணன்!!

செவ்வாய் 30, ஜூலை 2019 5:14:32 PM (IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்கறிய கருத்துக்களை தெரிவித்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் சரவணன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய எபிஸோடு ஒன்றில், பஸ்ஸில் கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் உரசுவது குறித்து பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் உரையாடினார் கமல்ஹாசன். அப்போது, சிலர் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் வருவார்கள் என்றார்.

அந்த சமயத்தில் கையை உயர்த்திய போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், காலேஜ் படிக்கும்போது நான் இப்படி பண்ணிருக்கேன் சார் என்று கமல்ஹாசனிடம் சொன்னார். அதைக்கேட்டு, பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களும் சிரித்தனர். சரவணனின் இந்தக் கருத்துக்கு, கடுமையான விமர்சனம் எழுந்தது. சின்மயி உள்ளிட்டவர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். "நடிகர் சரவணன் பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே ஏறியதாகக் கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கு அது நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காகப் பெண்களும் கைதட்டுகிறார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டார் சின்மயி.

இப்படி எதிர் விமர்சனங்கள் கடுமையான நிலையில், நேற்று (ஜூலை 29) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்ததுடன், மன்னிப்பும் கேட்டுள்ளார் சரவணன். சரவணனை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சேனல், எந்த வகையிலும் பெண்களை இழிவுபடுத்துவதையோ, அவமரியாதை செய்வதையோ ஏற்றுக் கொள்ளாது. நீங்கள் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சி) கமல் சார் எபிஸோடில் சொன்ன கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்கிறார். இதனைத் தொடர்ந்து சரவணனும் மன்னிப்பு கேட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory