» சினிமா » செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் முரளிதரன் பயோபிக்: ராணா டகுபதி தயாரிக்கிறார்

செவ்வாய் 30, ஜூலை 2019 4:44:43 PM (IST)



விஜய் சேதுபதி நடிப்பில் முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ளார். 

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரனை மையப்படுத்தி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படைத்தை பாகுபலி திரைப்படத்தில் நடித்த ராணா டகுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ராணா டகுபதி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, " நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குறித்த பயோபிக் திரைப்படத்தை என்னுடைய நிறுவனம் தயாரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படத்தை எம்எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார்.  என்னுடைய சுரேஷ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, தார் பிலிம்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை விவரிக்கும் கதையாக இது இருக்கும். விரைவில் திரைக்கு வரும் " எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தத் திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், " தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கும். ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். முரளிதரனே இப்படத்தில் இணைந்து பணியாற்றி என்னை வழிநடத்த உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு முரளிதரனுக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory