» சினிமா » செய்திகள்

சந்தானத்தின் ஏ1 படத்தை புறக்கணிக்க வேண்டும்: பிராமணர் சங்கம் கோரிக்கை

சனி 27, ஜூலை 2019 4:19:16 PM (IST)

சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க  வேண்டும் என தமிழ்நாடு  பிராமணர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் - ஏ1. இயக்கம் - ஜான்சன். இவர், நாளைய இயக்குநர் சீஸன் 2-வில் பட்டம் வென்றவர். இசை - சந்தோஷ் நாராயணன். நேற்று இந்தப் படம் வெளியானது.  இந்நிலையில் இந்தப் படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஏ1 படத்தில் பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் காட்சி அமைத்துள்ள நடிகர் சந்தானத்துக்கு எங்களுடைய எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனால் விளம்பரம் தேடிக்கொடுத்திட வேண்டாம் எனச் சகிப்புத்தன்மையோடு இருந்து வந்தோம். 

ஆனால் படம் தொடர்பான நிகழ்ச்சியில், தமது ஆட்சேபகரமான காட்சி அமைப்பினை நடிகர் சந்தானம் நியாயப்படுத்தியுள்ளது பிராமண சமூகத்தினரது உணர்வுகளை மேலும் புண்படுத்தியுள்ளது. சந்தானத்தின் கண்ணியமற்ற இந்தச் செயல்பாட்டினை தாம்ப்ராஸ் சார்பில் எங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  பிராமண சமூகத்தினர் அனைவரும் இந்தத் திரைப்படத்தை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், தங்களது இதர சமூக நண்பர்களையும் இப்படத்தினைப் புறக்கணித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்-Jan 10, 1565 - 06:30:00 AM | Posted IP 162.1*****

அப்போ டூட்டி online பொதுவானது அல்ல... bakta எதிராக comment போட்டால் delete பண்ணிவிடுவார்கள்.. இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையும திரியணும்..

தமிழன்-Aug 5, 2019 - 06:39:15 PM | Posted IP 162.1*****

உங்கள் விளம்பரத்துக்கு நன்றி.. இனிமேல் தான் எல்லாரும் பாக்கபோறோம்

சாமிAug 4, 2019 - 05:30:24 PM | Posted IP 173.2*****

அவன் மூஞ்சியை கூட இனி பார்க்கப்போவது இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesThoothukudi Business Directory