» சினிமா » செய்திகள்

மாயமான திரைப்பட நடிகையை மீட்டுத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!

சனி 27, ஜூலை 2019 4:15:20 PM (IST)

மாயமான தொரட்டி திரைப்பட நாயகி சத்யகலாவை மீட்டுத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷமன் மித்ரு தாக்கல் செய்த மனுவில், ஷமன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தொரட்டி திரைப்படம், வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தத் திரைப்படத்தை நான் தயாரித்து நடித்துள்ளேன். இந்தப் படத்தில் சத்யகலாவும் நடித்துள்ளார். 

திரைத் துறையில் சத்யகலா பணியாற்றுவதில், அவரது தந்தை ரத்தினத்துக்கு விருப்பமில்லை. இதனால் சத்யகலாவுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முயற்சிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், சத்யகலா திடீரென மாயமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, படத் தயாரிப்புக் குழு சார்பில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அந்தப் புகாரின் மீது போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மேலும் சென்னையில் உள்ள சத்யகலாவின் வீட்டிலும் யாரும் இல்லை. அவரது செல்ப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, ரத்தினத்தின் சட்ட விரோத காவலில் உள்ள நடிகை சத்யகலாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை ஆஜரான வழக்குரைஞர் இந்து கருணாகரன் முறையீடு செய்தார். வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesThoothukudi Business Directory