» சினிமா » செய்திகள்

பிக் பாஸ்: மீரா மிதுனிடம் போலீஸார் விசாரணை!

வெள்ளி 26, ஜூலை 2019 4:22:59 PM (IST)

பணமோசடி தொடர்பான புகாரின்பேரில் பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே நடைபெறும் சின்னச் சின்ன மோதல்கள்தான் பார்வையாளர்களை அதன் ரசிகர்களாக மாற்றுகிறது. எப்போதும் போல இந்த முறையும் அது நடந்து கொண்டிருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்குள் போலீஸ் சென்று விசாரணை நடத்துவது என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.வனிதா தனது மகளைக் கடத்திவிட்டதாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சென்று இந்த மாதத் தொடக்கத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போதே மீரா மிதுன் மீதும் ஒரு குற்றச்சாட்டு எழும்பியது. ரூ.50,000 கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக தி.நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுனை விசாரணைக்கு ஆஜராக தேனாம்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவருவதால் தற்போது ஆஜராக முடியாது என்றும் நிகழ்ச்சி முடிந்தபின் ஆஜராவதாகவும் மீரா மிதுன் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.தற்போது மிஸ் தமிழ்நாடு 2019 நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து எழும்பூர் போலீஸார், பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்குக்குச் சென்று மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory