» சினிமா » செய்திகள்

ரஜினியின் தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியீடு : போட்டியை அறிவித்தார் ஏ.ஆர். முருகதாஸ்!

வெள்ளி 26, ஜூலை 2019 12:21:38 PM (IST)



தர்பார் படத்தின் புதிய இரு போஸ்டர்களைப் பகிர்ந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இது தொடர்பான போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.


இந்நிலையில் தர்பார் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்தின் புதிய இரு போஸ்டர்களைப் பகிர்ந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இப்படங்களை வைத்து புதிய டிசைனுடன் போஸ்டர்களை டிசைன் செய்து கொடுக்க ரசிகர்களுக்கு போட்டி வைத்துள்ளார். அருமையாக டிசைன் செய்து கொடுக்கும் ரசிகரின் போஸ்டர், அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory