» சினிமா » செய்திகள்

பொன்னியின் செல்வன்: விக்ரம் சுவாரசிய தகவல் !

வியாழன் 25, ஜூலை 2019 3:28:26 PM (IST)

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் தனது கதாபத்திரம் குறித்த தகவலை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார். 

மலையாள சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படியும் ஒருவருடம் நடக்கும். எனக்கு ஆதித்ய கரிகாலன் என்கிற சுவாரசியமான கதாபாத்திரம். பொன்னியின் செல்வன் என்பது என்னுடைய கதாபாத்திரம் அல்ல. அது வேறொருவருடையது. இந்தப் படத்தில் எல்லோருக்கும் சமமான கதாபாத்திரங்கள் என்றார்.

மேலும் அவர் ஷங்கர் படத்தில் நடிப்பது குறித்து கூறியதாவது: ஷங்கர், இப்போதுதான் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் செய்துள்ளார். அடுத்ததாக விஜய்யுடன் ஒரு படம் பண்ணலாம். பிறகு நாங்கள் இருவரும் ஒரு படத்தில் மீண்டும் இணையவுள்ளோம். ஷங்கர் சார் எப்போதும் என்னிடம் மீண்டும் வருவார். மணி ரத்னத்துடனும் மீண்டும் படம் பண்ணுகிறேன். இரு இயக்குநர்களும் இந்தத் துறையில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory