» சினிமா » செய்திகள்

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி : அதிகாரப்பூர்வ தகவல்!!

வியாழன் 25, ஜூலை 2019 12:48:58 PM (IST)"என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது" என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா சினிமாவில் இது பயோபிக் காலம். சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டுவிட்டன. மேலும் சில கிரிக்கெட் வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பது இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படம். இதன் சிறப்பு என்னவெனில், முத்தையா முரளிதரனாக வேடம் ஏற்கப்போவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது இருந்தே எகிறத் தொடங்கிவிட்டது. 

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய முத்தையா முரளிதரன், தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது தனக்கு பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்," எனது வாழ்வின் கதையை படமாக தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன் . நான் இந்த படத்தின் குழுவோடு பல மாதங்களாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இனிமேலும் என்ன ஒத்துழைப்பு தேவையோ, அதை நான் இப்படத்துக்கு அளிப்பேன்", என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesThoothukudi Business Directory