» சினிமா » செய்திகள்

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து

செவ்வாய் 23, ஜூலை 2019 12:16:56 PM (IST)

சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ.978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. அதன்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன்கள் கொடுக்கப்பட்டன. எனினும் கிரையோஜெனிங் எரிப்பொருள் கோளாறால் விண்கலத்தை செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து இன்று சந்திரயான் 2 விண்கலத்தை செலுத்துவதற்காக நேற்றைய தினமே கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைத்துள்ளதால் இந்தியர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து கூறுகையில் 130 கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. "வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை". இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது என பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesThoothukudi Business Directory