» சினிமா » செய்திகள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு

செவ்வாய் 16, ஜூலை 2019 4:18:00 PM (IST)அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தை முதலில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்ட படக்குழு ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு மாற்றியது. பக்ரீத், சுதந்திர தினம் என விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் படக்குழு அந்தத் தேதியை தேர்வு செய்திருந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது படக்குழு ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதிலும் அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் தொடர்கிறது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் வித்யா பாலன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இமான் இசையமைப்பில் ஏற்கெனவே இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகவுள்ளன.ஜனவரி மாதம் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில் அடுத்த கொண்டாட்டத்துக்கு அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory