» சினிமா » செய்திகள்

சிவா-பிரியா ஆனந்த் ஜோடியுடன் இணைந்த சுமோ!!

செவ்வாய் 16, ஜூலை 2019 4:13:41 PM (IST)வணக்கம் சென்னை படத்திற்கு பின் சிவா - பிரியா ஆனந்த் ஜோடி சேர்ந்துள்ள சுமோ படத்தில்  ஜப்பானிய மல்யுத்த வீரர் ஒருவரும் இணைந்துள்ளார். 

2013ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் வணக்கம் சென்னை. சிவா-பிரியா ஆனந்த் நடித்த அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹோசிமின் இயக்கத்தில் உருவாகும் சுமோ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது இந்த ஜோடி. இப்படத்திற்கு ராஜிவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றார். மணிரத்மனின் கடல் திரைப்படத்திற்குப் பின் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் படமிது. சர்வம் தாள மயம் படத்தை இயக்கிய ராஜிவ் மேனன், கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்த பின் சுமோ படத்தின் பணிகளில் இணைந்துள்ளார்.

சுமோ என்ற ஜப்பானிய மல்யுத்ததை அடிப்படையாகக் கொண்ட முதல் இந்தியப் படமிதுவாகும். சமீபத்தில் இப்படக்குழு ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது. பல கட்ட ஆடிஷனுக்குப் பிறகு 18 சுமோ வீரர்களை இப்படத்திற்காக தேர்வு செய்திருக்கிறது படக்குழு. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யனமான பொழுது போக்கு அம்சங்களுடன் இப்படம் தயாராகிவருகிறது. இப்படத்திற்கு சிவா வசனமும் எழுதியுள்ளார். யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் பரபரப்பாக இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது சுமோ.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory