» சினிமா » செய்திகள்
மருத்துவரை மணந்தார் இயக்குநர் ஏஎல் விஜய்: பிரபலங்கள் வாழ்த்து!!
வெள்ளி 12, ஜூலை 2019 3:39:41 PM (IST)
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்கிற மருத்துவரைத் திருமணம் செய்துள்ளார்.

தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர். இந்நிலையில், இவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர்.
பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2வது திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். அதன்படி சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற இவர், பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மணமக்கள் மற்றும் விஜய்யின் பெற்றோர் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள், ரசிக பெருமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)
