» சினிமா » செய்திகள்
சசிகுமார் - சரத்குமார் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
வியாழன் 11, ஜூலை 2019 4:37:47 PM (IST)

முதல்முறையாக சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் நா நா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
சலீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிர்மல் குமார். அடுத்ததாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷாவை வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கியுள்ளார். பைனான்ஸ் பிரச்சினையால் இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில், சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சசிகுமார் உடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு நா நா என்று பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சசிகுமார் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் படம் வெளிவரும் என தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)
