» சினிமா » செய்திகள்
நடிகையை காரிலிருந்து தூக்கி வீசிய டிரைவர் கைது
வியாழன் 11, ஜூலை 2019 10:17:15 AM (IST)
வாடகை காரில் பயணம் செய்த நடிகையை திடீரென்று தூக்கி வீசிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து டிரைவர் காரை திருப்பிக்கொண்டு எனது வீடு உள்ள பகுதியில் கொண்டு வந்து நிறுத்தினார். பிறகு காரிலிருந்து இறங்கி வந்த டிரைவர் என்னை காரிலிருந்து தூக்கி வெளியே வீசினார். எனக்கு கோபம் வந்தது. அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனே டிரைவர் என்னை மிரட்டிவிட்டு, உன்னால் என்ன முடியுமோ செய், நீ என்ன செய்கிறாய் என்று பார்த்துவிடுகிறேன் என மிரட்டல் தொனியில்பேசிவிட்டு சென்றார். எனக்காக படக்குழுவினர் ஸ்டுடியோவில் காத்திருந்ததால் நான் உடனே செல்ல வேண்டியிருந்தது.
எனவே செல்போனில் எனது தந்தையை அழைத்து நடந்த சம்பவம்பற்றி கூறி சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன். இவ்வாறு சுவஸ்திகா தத்தா கூறி உள்ளார். ஃபேஸ்புக்கில் நடிகை வெளியிட்ட இந்த மெசேஜை கண்ட கொல்கத்தா போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் நடிகைக்கு மேசேஜ் அனுப்பினார்கள். அதில், உங்களுடைய புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி டிரைவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)
