» சினிமா » செய்திகள்

பிக் பாஸ்: முதல் போட்டியாளராக வந்து முதலில் வெளியேறிய ஃபாத்திமா பாபு!

திங்கள் 8, ஜூலை 2019 11:42:07 AM (IST)விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், முதல் போட்டியாளராக வந்த ஃபாத்திமாவே  முதலில் வெளியேறியுள்ளார். 

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் பிக் பாஸ் போட்டி தொடங்கும்போது முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் செய்தி வாசிப்பாளராகப் புகழ்பெற்ற ஃபாத்திமா பாபு. இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அவர் வெளியேற்றப்பட்ட நிகழ்வு காண்பிக்கப்பட்டது. இந்த சீஸனின் முதல் எவிக்‌ஷன் பட்டியலில் இடம்பிடித்த போட்டியாளர்களில் முதல் நபராக நடிகை மதுமிதா காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் ரசிகர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் போட்டியாளராக ஃபாத்திமா பாபு வெளியேறியுள்ளார். முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அனுயாவும் 2-வது சீஸனில் தொகுப்பாளர் மமதி சாரியும் முதல் வாரங்களில் வெளியேறினார்கள். இதையடுத்து முதல் வாரமே வெளியேறிய போட்டியாளர்களின் பட்டியலில் ஃபாத்திமா பாபுவும் இணைந்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory