» சினிமா » செய்திகள்

கபில்தேவை கண் முன் நிறுத்தும் ரன்வீர்: 83 படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியீடு

சனி 6, ஜூலை 2019 5:53:15 PM (IST)இன்று பிறந்தநாள் காணும் ரன்வீர் சிங், கபில்தேவ் பாத்திரத்தில் நடித்து வரும் 83 படத்தில் தன் தோற்றத்தை பகிர்ந்துள்ளார்.

1983 உலகக்கோப்பையில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுடனான கடைசி போட்டியில் வென்ற வரலாற்று நிகழ்வை மையப்படுத்தி 83 என்ற பெயரில் இந்திப் படம் உருவாகிவருகிறது. கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங், அவரது மனைவி ரோமி தேவ் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். இன்று தனது 34ஆவது பிறந்தநாள் காணும் ரன்வீர் சிங், இப்படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் தான் நடிக்கும் தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். புருவம், கண்கள், மீசை என அச்சு அசலாக கபில் தேவ் தோற்றத்தில் ரன்வீர் தோன்றியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

வெளியிட்ட நான்கு மணி நேரங்களிலேயே 1.7மில்லியன்(சுமார் 17 லட்சம்) லைக்குளை அள்ளியுள்ளார். மேலும் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை நடைபெற்று வரும் சமயத்தில் இந்தியாவின் முதல் உலகக் கோப்பை வெற்றியை மையப்படுத்திய 83 திரைப்படம் உருவாகிவருவது சினிமா ரசிகர்களையும் கடந்து கிரிக்கெட் ரசிகர்களையும் உற்சாகமடையவைத்துள்ளது. ஏக் தா டைகர், பஜ்ரங்கி பைஜான் போன்ற இந்திப் படங்களை இயக்கிய கபீர் கான் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory