» சினிமா » செய்திகள்

சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது : இயக்குநர் பா.இரஞ்சித் வேதனை

வெள்ளி 5, ஜூலை 2019 4:10:26 PM (IST)

சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது என தூத்துக்குடி தம்பதி கொலை தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். 

குளத்தூர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த திருமணி மகன் சோலைராஜா(24). குளத்தூர் அருகே பல்லாகுளத்தை சேர்ந்த அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி(21). இவர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு, காதலித்தனர்.

தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வரவே, பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நேற்று(ஜுலை 4) அதிகாலையில் மின் தடை ஏற்பட்டதால் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியே தூங்கியுள்ளனர். காலையில் சோலைராஜா வீட்டுக்கு அவரது தாய் முத்து சென்றபோது, சோலைராஜாவும், ஜோதியும் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். அப்போது ஜோதியின் தந்தை அழகரை பிடித்து விசாரித்தனர். கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ச்சியாக காதல் திருமணத்தால் நடைபெறும் கொலைகள் தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், "கடந்த பத்து தினங்களில் மேட்டுப்பாளையம் கனகராஜ் - வர்ஷினிபிரியா, திருச்சி பாலக்கரை பசுமடம் சத்தியநாராயணன், இவர்களை தொடர்ந்து  தூத்துகுடி (மா) குளத்தூர் சமத்துவபுரத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த சோலைராஜா - ஜோதி படுகொலை. நாம் தமிழர்!நாம் இந்து! நாம் திராவிடர்! இல்லை நாம் ஜாதி வெறியர்கள்.

படுகொலை செய்யப்பட்ட  சோலைராஜா - ஜோதி  இருவரும் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். சுயசாதி பற்று இருக்கும் பட்டியலினத்தவர்களே! விதைத்தவர்கள் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள்! செய்வார்கள்!. சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது. விழித்து கொள்வோமா?... "யாருங்க இப்போதெல்லாம் ஜாதி பாக்குறாங்க?”ஒரு கூட்டம் பேசிகிட்டு இருக்கும்! "இவனுங்கதான் ஜாதியத்தை பேசிபேசி வளக்குறாங்க” என்று சொல்லுவார்கள் சிலர்! வழக்கம் போல் கொலைகள் மறக்கப்படும்! மற்றும் ஒன்று நிகழும்!” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.


மக்கள் கருத்து

சந்துருJul 7, 2019 - 03:09:12 PM | Posted IP 162.1*****

மிஸ்டர் ரஞ்சித் - இறந்துபோன இருவருமே பட்டியலினம் என்கிறீர்கள் - அது ஒருபுறம் இருக்கட்டும் - எவ்வளவு மனவேதனை, அழுத்தம் இருந்தால் - பாசம் மறந்து சொந்த மகளை அல்லது மகனை ஒருவன் கொலை செய்வான் - இதில் ஜாதியும் வேதமும் என்ன செய்யும் - மனிதனின் மனம் என்கிற பேழைக்குள் ஓடும் விகாரங்களை சரிசெய்ய என்ன வழி என்று தேடுங்கள் - தெரிந்தால் மற்றவருக்கு சொல்லித்தாருங்கள் - அதைவிடுத்து ஜாதியம் பேசும் சிறுபிள்ளைத்தனம் செய்யாதீர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory