» சினிமா » செய்திகள்

கடாரம் கொண்டான் படத்தில் நடித்ததற்கு ஒரே காரணம் கமல்: விக்ரம் நெகிழ்ச்சி

வியாழன் 4, ஜூலை 2019 5:45:54 PM (IST)"கடாரம் கொண்டான் படத்தில் நடித்ததற்கு ஒரே காரணம் கமல் சார்" என்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசினார் .

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கமலும் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். இந்த விழாவில் விக்ரம் பேசும் போது, "கமல் சார் தான் உத்வேகம். அதற்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். கமல் சார், சிவாஜி சார் படங்கள் எல்லாம் பார்த்து தான் எனக்குள் ஒரு ஃபயர் வந்திருக்கும். அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். 

நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு என எனக்குப் பிடித்த படங்கள் குறித்து ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. ஆனால், எனக்கு ரொம்பப் பிடித்த படம் 16 வயதினிலே. ரீமேக் பண்ணனும் என்றால் என்ற கேள்வி வரும் போது 16 வயதினிலே சப்பாணி கேரக்டர்  பண்ணனும் என்று சொல்வேன். ஆனால், என்னால் அதைச் சரியாகப் பண்ண முடியாது என்பது தெரியும். அந்த இளம் வயதில் கூட ரொம்ப மெச்சூரிட்டியுடன் நடித்திருப்பார். உலக அளவில் கமல் சாருடைய பணியைப் பாராட்டுகிறார்கள்.

கடாரம் கொண்டான் படத்தில் நடித்ததற்கு ஒரே காரணம் கமல் சார். போன் வந்தவுடனே பண்ணிவிடுகிறேன் என்று தான் சொன்னேன். கதையைக் கேட்டவுடன், வித்தியாசமாக இருக்கிறது. உலகத்தரத்தில் நமது கலாச்சாரம் மிஸ் ஆகாமல், ரொம்ப ஸ்டைலிஷான படத்தை ராஜேஷ் கொடுத்திருக்கார். நிறைய வித்தியசாமான, கடினமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், இந்த கேரக்டரில் ஒரு ஈர்ப்பு இருந்தது. துருவ நட்சத்திரம் படத்தில் நான் ஸ்டைலாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், கடாரம் கொண்டான் படத்தில் வேறொரு ஸ்டைலில் வித்தியாசமாக இருப்பேன். அபி இந்தப் படத்தில் இன்னொரு நாயகன் தான். 

நாசர் சாருடைய மகன் என் படத்தின் மூலம் திரையுலகிற்கு வருவதில் சந்தோஷம். ரொம்ப வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் பண்ணியிருக்கார். இந்தப் படத்தில் எங்கள் இருவருக்குள் தான் ஒரு போட்டி மாதிரி இருந்துகொண்டே இருக்கும். ரொம்ப வேகமாக நகரும் கதை, சண்டைக் காட்சிகள் என போகும் போது அதில் இருக்கும் ஒரு பூ போல இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன். பின்னணி இசையை ஜிப்ரான் அருமையாக கொடுத்திருந்தார். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் சண்டைக் காட்சிகள் ஒரு ஹாலிவுட் படத்துக்கு பண்ணுவது போல் செய்திருக்கிறோம். இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா ரொம்ப திறமையான இயக்குநர். அவரது பணித்திறன் எனக்குப் பிடித்திருந்தது. இந்தப் படம் எனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என நினைக்கிறேன்” என்று விக்ரம் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory