» சினிமா » செய்திகள்

குழந்தை கடத்தல் வழக்கில் கைதாவாரா வனிதா? பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை

புதன் 3, ஜூலை 2019 4:28:55 PM (IST)

சொந்த மகளையே கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனிதா விஜயகுமாரை கைது செய்ய பிக்பாஸ் வீட்டிற்குள் தெலங்கானா போலீஸ் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நடிகர் ஆகாஷுடன் ஏற்பட்ட மண முறிவைத் தொடர்ந்து, இரண்டாவதாக தெலங்கானாவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை கரம் பிடித்தார் வனிதா. 2007ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2012ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களது 8 வயது மகள் ஜோவிகா, தந்தை ஆனந்துடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மகள் ஜோவிகாவை, சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார் வனிதா. ஆனால் தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலங்கானா போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் ராஜன் ஆனந்த். 

இதை ஏற்றுக் கொண்ட போலீஸார் வனிதா மீது ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர். சென்னையில் அவருக்கு நிரந்தர முகவரி இல்லாததால் அவரைத் தேடி கண்டறிந்து கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார். காணாமல் போன தனது மகளுடன் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் மேடையில் கமலிடம் ஆசிர்வாதம் வாங்குவது கண்டு வனிதா விஜயகுமாரின் இருப்பிடம் தெரிந்ததை அடுத்து உடனடியாக சைபராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரைப் பெற்ற சைபராபாத் போலீஸார் வனிதா விஜயகுமார்மீது ஐபிசி பிரிவு 363-ன் கீழ் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வாரண்ட்டுடன் சென்னை வந்தனர். சென்னை காவல் உயர் அதிகாரிகள் ஆணையின்படி, மதுரவாயல் போலீஸாரை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்த தெலங்கானா போலீஸார் சென்னை போலீஸார் உதவியுடன் நேற்று இரவு பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் வீட்டிற்கு வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்தச் சென்றனர். அப்போது அங்கே வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் பேரில் இரவு நேரம் என்பதால் காலையில் விசாரிப்பதற்காக திரும்பி வந்தனர். 

இந்நிலையில் இன்று காலை மீண்டும் தெலங்கானா போலீஸார் மற்றும் சென்னை போலீஸார் பிக் பாஸ் வீட்டிற்கு விசாரணைக்குச் சென்றுள்ளனர். இன்று பிக் பாஸ் வீட்டில் அளிக்கும் பதிலைப் பொறுத்தே போலீஸாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்தராஜ் கூறுகையில், என் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வைத்து விட்டு குழந்தையுடன் திரும்பிவிடுவோம். அவ்வாறு குழந்தையை ஒப்படைக்காவிட்டால் வனிதா விஜயகுமாரை நீதிமன்ற உத்தரவு பெற்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். இவ்வாறு ஆனந்தராஜ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சந்துருJul 7, 2019 - 03:10:29 PM | Posted IP 162.1*****

இதுகூட கமலின் விளம்பர யுக்திதான் - நான் உறுதியாக நம்புகிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory