» சினிமா » செய்திகள்

எனது திருமணத்துக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் : சுருதிஹாசன்

புதன் 3, ஜூலை 2019 12:26:55 PM (IST)

 "என்னுடைய திருமணத்துக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்” என்று ரசிகரின் கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதில் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் 2009-ல் ‘லக்’ இந்தி படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் லண்டனில் வசிக்கும் இத்தாலி நடிகர் மைக்கேல் கார்சேலுடன் பழகினார். இந்தியாவுக்கு அவரை அழைத்து வந்து பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தினார். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்தார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக சி.3 படம் வந்தது. இந்த நிலையில் இவர்கள் காதல் திடீரென்று முறிந்தது. "வாழ்க்கை நம் இருவரையும் எதிர் எதிர் துருவத்தில் வைத்திருப்பதால் துரதிர்ஷ்டவசமாக அவரவர் வழியே பயணிக்க வேண்டி உள்ளது” என்று மைக் கேல் டுவிட்டரில் பதிவிட்டார். ஸ்ருதிஹாசனும் என் வாழ்க்கையில் இன்னொரு புதிய கட்டத்தை தொடங்குகிறேன் என்று கூறினார். தற்போது ஸ்ருதிஹாசன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். 

அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் ஸ்ருதியிடம், "உங்கள் திருமணம் எப்போது? எங்களுக்கு அழைப்பு விடுத்தால் உங்கள் திருமணத்தில் கலந்துகொள்வோம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், "என்னுடைய திருமணத்துக்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக எனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வாருங்கள். சேர்ந்து கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சந்துருJul 7, 2019 - 03:11:39 PM | Posted IP 162.1*****

ஹனிமூன் எல்லாம் போயிட்டு வந்தாச்சே -

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory