» சினிமா » செய்திகள்
விஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்கம்: அமலாபால் கண்டனம்
வெள்ளி 28, ஜூன் 2019 11:29:54 AM (IST)
விஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு அமலாபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"விஜய்சேதுபதி படத்தில் இருந்து நான் விலகவில்லை. ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி பட நிறுவனமே என்னை நீக்கி உள்ளது. நான் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை இதுவரை என்னுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் யாரும் சொன்னது இல்லை. எனது எல்லா பட நிறுவனங்களுக்கும் ஆதரவாகவே இருந்து இருக்கிறேன். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு எனது சம்பளத்தில் ஒரு பகுதியை வாங்கிக்கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் பண பிரச்சினையில் இருந்ததால் அவருக்கு கடன் கொடுத்து இருக்கிறேன். அதோ அந்த பறவை போல படப்பிடிப்பில் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்று கருதி சிறிய அறையில்தான் தங்கி இருந்தேன்.
ஆடை படத்தில் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என்று குறைந்த முன்பணம் மட்டும் வாங்கிக்கொண்டு நடித்தேன். தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க நீங்கள் விதிக்கும் நிபந்தனையை ஏற்க முடியாது. எனவே நீங்கள் தேவை இல்லை என்று தயாரிப்பாளர் ரத்னவேலு எனக்கு தகவல் அனுப்பி உள்ளார். நான் ஊட்டியில் தங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டதை இப்படி சொல்கிறார். ஆடை டிரெய்லரை பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையை காட்டுகிறது. விஜய்சேதுபதியை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் அவரது ரசிகை.”இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)
