» சினிமா » செய்திகள்

வர்மா படம் வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் உருவாகும் - தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

வியாழன் 7, பிப்ரவரி 2019 6:35:17 PM (IST)

துருவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் படம், வர்மா. இந்த படத்தை வேறோர் இயக்குநரை வைத்து இயக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த தெலுகு படம், அர்ஜூன் ரெட்டி. தெலுகு மட்டுமல்லாது, படம் தென்னிந்திய முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேரளாவை மையமாகக் கொண்ட ஈ 4 நிறுவனத்தின் முகேஷ்  மேத்தா பெற்றிருந்தார். 

பாலா இயக்கிய இந்த படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்தது. இந்த நிலையில், தயாரிப்பாளர் தரப்பிருந்து ஒரு பரபரப்பு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது, அதில் கூறியிருப்பதாவது, படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. மூலக்கதைக்கும் இதுக்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். 

அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை. அதற்கு பதில் ஷூட்டிங்கை மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். துருவ்தான் படத்தின் ஹீரோவாக நடிப்பார். ஆனால், இந்தப் படத்தை வேறொருவர் இயக்குவார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும், இயக்குநர் குறித்தும் பின்னர் அறிவிப்போம். 

இது எங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தெலுகு பதிப்பின் கதைக்கருவை அப்படியே தமிழ் ரசிகர்களுக்குக் கொடுப்பதில்தான் எங்களுக்கு விருப்பம். படம் சொன்னதுபோலவே ஜூன் மாதம் வெளியாகும். என்ற அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory