» சினிமா » செய்திகள்

மீண்டும் செல்போனை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்

வியாழன் 7, பிப்ரவரி 2019 1:04:16 PM (IST)தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டி விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் சிவகுமார்.

நடிகர் சிவகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது அனுமதியில்லாமல் செல்பி எடுக்க முயனற்றவரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலானது. இது தொடர்பாக சிவகுமார் வருத்தமும் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நடிகர் சிவகுமார் வந்திருந்தார். அவர் நடந்து வரும் போது அவர் பக்கத்தில் செல்பி எடுக்க ஒருவர் போனை கொண்டு வந்தார். ஆனால் சிவகுமார் அந்த செல்போனை தட்டி விட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


மக்கள் கருத்து

மக்கள்Feb 8, 2019 - 10:19:37 AM | Posted IP 141.1*****

உங்களை இவ்வளவு பெரிய பிரபலம் ஆக்கியது கேமராதானே ,செல்பியும் கேமராதானே இதற்கு ஏன் இவ்வளவு கோபம் . உங்களுக்கு மறை கழண்டு விட்டதா?

ஆப்Feb 7, 2019 - 07:28:24 PM | Posted IP 141.1*****

பொது சபைக்கு வராதீங்க சார் .

ஒருவன்Feb 7, 2019 - 04:07:03 PM | Posted IP 172.6*****

கூத்தாடி பின்னாடி போனால் அப்படிதான் ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes
Thoothukudi Business Directory