» சினிமா » செய்திகள்

கிரீஸ் நாட்டில் தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம்

சனி 2, பிப்ரவரி 2019 5:48:07 PM (IST)

தனது காதலரான ஜார்ஜ் என்பவரை கிரீஸ் நாட்டில் உள்ள தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம் செய்ய உள்ளார்.

நடிகை எமிஜாக்சன், தமிழில் மதராச பட்டணம், தாண்டவம், தங்க மகன், ஐ, கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். எமிஜாக்சன் 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் ஏற்பட்ட காதலும் முறிந்தது. 

இப்போது லண்டனில் ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ஜார்ஜ் என்பவரை எமிஜாக்சன் காதலிக்கிறார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். மோதிரம் மாற்றி திருமணத்தையும் நிச்சயம் செய்துள்ளனர். திருமணத்தை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய பல நாடுகளை சுற்றி வந்தனர்.  தற்போது கிரீஸ் நாட்டில் மைகொனோஸ் தீவில் உள்ள வில்லா ஒன்று அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அங்கு திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ முறைப்படி அவர்கள் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகு இங்கிலாந்தில் குடியேறுகிறார்கள்.

நடிகைகள் அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, நேகா துபியா, சோனம் கபூர், பாவனா, ஸ்ரேயா உள்ளிட்ட பலருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோருக்கு திருமணம் முடிவாகி இந்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். தற்போது எமிஜாக்சனும் திருமணத்துக்கு தயாராகி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory