» சினிமா » செய்திகள்

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வியாழன் 31, ஜனவரி 2019 8:07:38 PM (IST)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரும் பிப்.2 மற்றும் 3ம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவை கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த நிகழ்ச்சி நடத்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்று கூறி விட்டு, நிதி திரட்ட தாயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முறையிடப்பட்டது. 

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடைக்கோரி உரிய ஆதாரங்கள் இல்லாமல், அவசர கதியில் மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடத்த தடையில்லை. அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டார். மார்ச் 3ம் தேதி நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில், விஷால் தரப்பினர் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் ஆணை பிறப்பித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Black Forest CakesThoothukudi Business Directory